இந்தியா

நாடு முழுவதும் புதிதாக 8,822 பேருக்கு கரோனா பாதிப்பு

15th Jun 2022 09:08 AM

ADVERTISEMENT


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,822-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 8,822 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,32,45,517-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 53,637 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 15 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,24,792 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 0.12 சதவீதமாக உள்ளது.

ADVERTISEMENT

கரோனாவில் இருந்து 5,718 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,26,77,088-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.66 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,95,50,87,271 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மட்டும் 13,58,607 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசித் திட்டம், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தொடா் நடவடிக்கைகள், தீவிர கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க | நேஷனல் ஹெரால்டு -‘தலைப்புச் செய்தி’யான நாளிதழ்!

ADVERTISEMENT
ADVERTISEMENT