இந்தியா

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் மீட்கப்பட்ட சிறுவனுக்கு செப்சிஸ் சிகிச்சை

15th Jun 2022 04:39 PM

ADVERTISEMENT

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவனுக்கு செப்சிஸ் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர்.

ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டத்தில் பிஹ்ரிட் கிராமத்தில் 11 வயது சிறுன் ராகுல் சாஹு கடந்த ஞாயிற்றுக்கிழமை 80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். 

சிறுவனை மீட்கப் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவம், உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகம் உள்பட 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம்: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்ன தெரியுமா?

இந்நிலையில் 104 மணி நேர மீட்புப் பணிக்குப் பின்னா், அந்தச் சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டான். அவன் பிலாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது உடல்நிலை சீராக இருப்பதாக பிலாஸ்பூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

சிறுவன் கடந்த 4 நாள்களாக ஆழ்துளைக் கிணற்றில் இருந்ததால் அவனுக்கு  உடலில் புண்கள் ஏற்பட்டுள்ளது. இதற்காக செப்சிஸ் சிகிச்சை(அழுகிய புண் காரணமாக குருதியில் நச்சுத் தன்மை உண்டாதல்) வழங்கப்படுகிறது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT