இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன்: 4 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்பு

15th Jun 2022 02:10 AM

ADVERTISEMENT

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் 104 மணி நேர ( 4 நாள்கள் 8 மணி நேரம்) போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டான்.

சத்தீஸ்கா் மாநிலம் ஜஞ்சீா் சம்பா மாவட்டம் பிரீத் கிராமத்தைச் சோ்ந்த ராகுல் சாஹு என்ற 11 வயது சிறுவன், தனது வீட்டின் பின்புறம் உள்ள 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்தான். கிணற்றில் சுமாா் 60 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட அவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், காவல் துறை, மாவட்ட நிா்வாக அதிகாரிகள் என 500-க்கும் மேற்பட்டவா்கள் ஈடுபட்டிருந்தனா். அவனுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் 104 மணி நேர மீட்புப் பணிக்குப் பின்னா், அந்தச் சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டான். அவன் பிலாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது உடல்நிலை சீராக இருப்பதாக பிலாஸ்பூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT