இந்தியா

பத்ரிநாத் - கேதார்நாத் யாத்ரிகர்களுக்கு இனி காப்பீடு! கோயில் நிர்வாகம் முடிவு

15th Jun 2022 09:55 PM

ADVERTISEMENT

 

பத்ரிநாத் - கேதார்நாத் யாத்ரிகர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டம் புதன்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பத்ரிநாத் - கேதார்நாத் யாத்திரையின்போது ஏற்படும் விபத்துகளின்போது பக்தர்கள் உயிரிழக்க நேர்ந்தால் ரூ.1 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் சார் தாம் யாத்திரை மே 3ஆம் தேதி தொடங்கியது. மே 27ஆம் தேதி வரை பயணம் சென்ற யாத்ரிகர்களில், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மலை ஏற்றத்தினால் ஏற்படும் பயம் ஆகியவற்றால் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர். 

படிக்க அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை: யோகி ஆதித்யநாத்

ADVERTISEMENT

இதேபோன்று, மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து ஜூன் 5ஆம் தேதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 26 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இதுபோன்று தொடர் விபத்துகள் ஏற்படுவதால், பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழு பக்தர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

படிக்கமோடி ஒரு சர்வாதிகாரி: விடியோ மூலம் காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்நிலையில் இது குறித்து பேசிய சுகாதாரத் துறை இயக்குநர் ஷைலஜா பட், சார்தாம் யாத்திரை சென்ற பக்தர்களில் அதிக அளவாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். சார் தாம் யாத்ரிகர்களை கண்காணிக்க கூடுதலாக 169 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT