இந்தியா

அயோத்திக்கு செல்ல லக்னௌ வந்தார் ஆதித்ய தாக்கரே

15th Jun 2022 01:24 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரே புதன்கிழமை லக்னௌவில்  உள்ள ராமர் கோயிலை தரிசிக்க அயோத்திக்கு வந்துள்ளார். 

முதல் முறையாக அயோத்திக்கு தாக்கரே வருகை தருகின்றார். இதையடுத்து அவர் ராமர் கோயிலில் வழிபாடு செய்வார். மேலும் சரயு நதிக்கரையில் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பார். 

ஒரு நாள் பயணமாக அயோதிக்கு வந்த அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின் செய்தியாளர்களையும் சந்திக்கிறார். 

ADVERTISEMENT

காலை 11 மணியளவில் லக்னௌவுக்கு வந்த தாக்கரே அங்கிருந்து சாலை வழியாக அயோத்தியை அடைந்தார்.

தாக்கரேவின் வருகைக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட மூத்த சேனா தலைவர் சஞ்சய் ராவுத் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் செவ்வாய்கிழமை அயோத்தியை அடைந்தனர்.

முன்னதாக, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே ஜூன் 5ஆம் தேதி அயோத்திக்கு வருவதாக அறிவித்தார், அது பின்னர் ரத்து செய்யப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT