இந்தியா

எதனடிப்படையில் அமலாக்கத்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது? ப.சிதம்பரம்

14th Jun 2022 01:02 PM

ADVERTISEMENT

புதுதில்லி: எதனடிப்படையில் அமலாக்கத்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக தில்லியிலுள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி.

திங்கள்கிழமை ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் சுமாா் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அவரை மீண்டும் செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டதையடுத்து, இன்றும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: அமலாக்கத் துறை முன்பு 2வது நாளாக ஆஜரானார் ராகுல்

ADVERTISEMENT

அமலாக்கத் துறையை  கண்டித்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உள்ளது. கடந்த 4,5 ஆண்டுகளில் எந்த ஒரு பாஜக தலைவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதா?  என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதிப்பது இல்லை. எஃப்.ஐ.ஆர். இல்லாமல் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க முடியாது. எதனடிப்படையில் அமலாக்கத்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது?   என்று  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT