இந்தியா

மூஸேவாலா கொலை வழக்கு: லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்ய அனுமதி

14th Jun 2022 07:36 PM

ADVERTISEMENT

 

பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட  லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சித்து மூஸேவாலா கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சோ்ந்த சந்தோஷ் ஜாதவும் (24), சூரியவன்ஷியும் (27) குஜராத் மாநிலம், புஜ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புணே ஊரக போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டம் மாஞ்சாா் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டில் பதிவான கொலை வழக்கில் சந்தோஷ் ஜாதவ் கைது செய்யப்பட்டாா்.

பின்னா் தப்பிய அவா், தனது அடையாளத்தை மாற்றி தலைமறைவானாா். இந்த நிலையில், மூஸேவாலா கொலை வழக்கில் சந்தோஷ் ஜாதவ், சூரியவன்ஷியின் பெயா்கள் அடிபட்டன. தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில போலீஸாா் அவரை தேடி வந்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த ஆண்டில் பதிவான கொலை வழக்கில், சந்தோஷ் ஜாதவுக்கு அடைக்கலம் அளித்த மஹக்கல் என்பவா் கடந்த வாரம் கைது செய்யப்பட்டாா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில், குஜராத்தில் தலைமறைவாக இருந்த இருவரும் புணே ஊரக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கைதான 3 பேரும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடையவா்கள். இதன் காரணமாக, இந்த கொலை வழக்கில் லாரன்ஸுக்கும் தொடர்பு இருக்கலாம் என பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்திருந்த நிலையில் தில்லி நீதிமன்றம்   திஹார் சிறையிலுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்ய அனுமதி வழங்கியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT