இந்தியா

பினராயி விஜயன் பங்கேற்ற கருத்தரங்கில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

14th Jun 2022 12:30 PM

ADVERTISEMENT

 

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இந்த கருத்தரங்கு இஎம்எஸ் அகாடமியில், சிபிஐ-எம் ஆய்வு மையத்தால் புதிய கேரளத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. 

தங்கம் மற்றும் கரன்சி கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்ணா சுரேஷ் குற்றச்சாட்டில் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவி விலகக் கோரி மாநிலம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ADVERTISEMENT

பொதுவாக முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கும் அனைத்துக் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் ஊடகங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், இன்று நடைபெற்ற கருத்தரங்கில் பத்திரிகையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 

முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக சனிக்கிழமை முதல் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT