இந்தியா

தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கைது

14th Jun 2022 11:33 AM

ADVERTISEMENT

 

அமலாக்கத்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஆதீர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்டோரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது. 

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தொடர்ந்து 2-வது நாளாக ஆஜராகிறார். நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைக் கண்டித்து நேற்று முதலே நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், இன்றும் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், பி.எல்.புனியா, செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஆதீர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிக்க | அரசை எதிர்த்து கேள்வி எழுப்புவதால் ராகுலைப் பார்த்து பாஜக பயப்படுகிறது: காங்கிரஸ்

ADVERTISEMENT
ADVERTISEMENT