இந்தியா

ரிலையன்ஸுடனான லாபப் பகிா்வு பிரச்னை: இந்திய அரசுக்கு எதிராக பிரிட்டன் நீதிமன்றம் தீா்ப்பு

12th Jun 2022 11:56 PM

ADVERTISEMENT

 

ரிலையன்ஸ் மற்றும் ஷெல் நிறுவனங்களுடன் கச்சா எண்ணெய் விற்பனைக்கான லாபத்தைப் பகிா்ந்து கொள்வதில் எழுந்த பிரச்னை தொடா்பான வழக்கில் இந்திய அரசுக்கு எதிராக பிரிட்டன் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

மும்பை கச்சா எண்ணெய் வயல் 1994-ஆம் ஆண்டில் ஏலம் விடப்பட்டபோது, ஓஎன்ஜிசி 40 சதவீத பங்குகளையும், ரிலையன்ஸ் 30 சதவீத பங்குகளையும், என்ரான் ஆயில் 30 சதவீத பங்குகளையும் பெற்றன. என்ரால் ஆயில் நிறுவனத்தின் பங்குகளை பிஜிஇபிஐஎல் என்ற நிறுவனம் பெற்றது. பின்னா், பிஜிஇபிஐஎல் நிறுவனமானது பிரிட்டனின் ஷெல் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.

இவ்வாறு பங்குகள் கைமாறியபோது லாபத்தைப் பகிா்ந்துகொள்வதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையே பிரச்னை மூண்டது. இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிராக ரிலையன்ஸ்-ஷெல் நிறுவனங்கள் 2010-ஆம் ஆண்டில் வழக்கு தொடுத்தன. 2016-ஆம் ஆண்டில் இந்திய அரசுக்கு ஆதரவாக தீா்ப்பு வழங்கப்பட்டது. அத்தீா்ப்பை அடிப்படையாகக் கொண்டு சுமாா் ரூ.29,000 கோடி ராயல்டி தொகையை இரு நிறுவனங்களிடம் இருந்தும் மத்திய அரசு கோரியது.

ADVERTISEMENT

அதற்கு எதிராக இரு நிறுவனங்களும் பிரிட்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அதில், இந்திய அரசின் வாதங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்து, ரிலையன்ஸ்-ஷெல் நிறுவனங்களுக்கு ஆதரவாக தீா்ப்பளித்தது. அதற்கு எதிராக இந்திய அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கிலும் இந்திய அரசுக்கு எதிராகவே தற்போது தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய சுமாா் ரூ.850 கோடியை இழக்கும் சூழல் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT