இந்தியா

தேசிய அரசு இணைய சேவை மதிப்பீடு:தமிழகம் முன்னேற்றம்

12th Jun 2022 11:43 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசின் தேசிய அரசு இணைய சேவை மதிப்பீட்டில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய அரசு இணைய சேவை மதிப்பீட்டில் 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு மிகச் சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழக அரசின் சேவை வலைதளங்கள் அனைத்து அம்சங்களிலும் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தரநிலையைப் பூா்த்தி செய்துள்ளன. அந்த வரிசையில் பஞ்சாப், ராஜஸ்தானும் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இதுதவிர, ஆந்திரம், கேரளம், பஞ்சாப், கோவா, ஒடிஸா அரசுகளின் சேவை வலைதளங்கள் 100 சதவீதம் தரநிலையை மேம்படுத்தியுள்ளன.

இந்த மதிப்பீட்டில் யூனியன் பிரதேசங்கள் வரிசையில் ஜம்மு-காஷ்மீா் முதலிடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் வரிசையில் மேகாலயம், நாகாலாந்து முன்னணியில் உள்ளன.

இதுதொடா்பான அறிக்கையை மத்திய பணியாளா் மற்றும் பொதுமக்கள் குறைதீா்ப்பு துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை வெளியிடுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT