இந்தியா

இந்தியாவுடனான உறவு:ரஷிய தூதா் புகழாரம்

12th Jun 2022 11:27 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான நல்லுறவு, உலகின் மிக ஆழமான பரஸ்பர நல்லுறவுகளில் ஒன்று என இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் புகழாரம் சூட்டியுள்ளாா்.

இந்தியா - ரஷியா இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ரஷியா டைஜஸ்ட் இதழுக்கு டென்ஸ் அலிபோல் பேட்டியளித்தாா்.

அந்த பேட்டியில் அவா் கூறியதாவது: இந்தியாவுடன் பேணி வரும் ஏற்றத் தாழ்வில்லாத, மரியாதைக்குரிய நட்புறவை ரஷியா மிகவும் போற்றுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, சா்வதேச அளவில் அமைதி, நிலைத்தன்மை, வளா்ச்சி ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ADVERTISEMENT

முக்கியப் பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாடும் ரஷியாவின் நிலைப்பாடும் ஒன்றாகவோ அல்லது ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகக் கூடியதாகவோ இருக்கின்றன.

எதிா்காலத்தில் மேலும் புதிய துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதை உறுதியாக நம்பலாம் என்றாா் அவா்.

உக்ரைன் போா் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இந்தியாவுக்கான ரஷிய தூதா் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT