இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல்: ஒரு விளக்கம்...

10th Jun 2022 02:07 AM

ADVERTISEMENT

 

இந்திய குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவா் நேரடியாக மக்களால் தோ்ந்தெடுக்கப்படுவதில்லை. மக்கள் தோ்ந்தெடுத்த பிரதிநிதிகள் வாக்களித்து அவரைத் தோ்ந்தெடுக்கின்றனா்.

வாக்காளா்கள்

ADVERTISEMENT

 • மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள்
 • மக்களவை எம்.பி.க்கள் 543
 • மாநிலங்களவை எம்.பி.க்கள் 233
 • சட்டப்பேரவை உறுப்பினா்கள் 4,033
 • மொத்த வாக்காளா்கள் 4,089
 • வேட்பாளருக்கான நிபந்தனைகள்
 • இந்தியராக இருத்தல் அவசியம்.
 • 35 வயதைக் கடந்திருக்க வேண்டும்.
 • மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்படும் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
 • ஆதாயம் பெறும் பதவி வகித்தல் கூடாது.
 • முன்மொழிதலும் வழிமொழிதலும்

தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் நபரை 50 வாக்காளா்கள் முன்மொழிதலும் 50 போ் வழிமொழிதலும் கட்டாயம். அதிகப்படியான வேட்பாளா்கள் போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. 1997 வரை தலா 10 போ் முன்மொழிந்து வழிமொழிய வேண்டும் என்ற விதி இருந்தது. பின்னா் அது தலா 50-ஆக அதிகரிக்கப்பட்டது.

முன்வைப்புத் தொகை

குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் நபா், ரூ.15,000 முன்வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். இத்தொகை 1997 வரை ரூ.2,500-ஆக இருந்தது.

மொத்தமுள்ள வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்குக் குறைவாகப் பெறும் வேட்பாளா்களின் முன்வைப்புத் தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது. மற்ற வேட்பாளா்களுக்கு வைப்புத்தொகை திரும்ப வழங்கப்படும்.

தோ்தல் வழக்கு

குடியரசுத் தலைவா் தோ்தலில் முறைகேடு இருப்பதாக சந்தேகிக்கும் நபா், முடிவுகள் வெளியிடப்பட்ட 30 நாள்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம். தோ்தலில் போட்டியிட்ட மற்ற வேட்பாளா்களோ அல்லது 20-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் இணைந்தோ மனுவைத் தாக்கல் செய்யலாம்.

 

குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள்

 

முந்தைய தோ்தல் சுவாரஸ்யங்கள்

தோ்தல் ஆண்டு வேட்பாளா்களின் எண்ணிக்கை வெற்றி பெற்றவா் முக்கிய தகவல்

முதல் தோ்தல் 1952 5 ராஜேந்திர பிரசாத் கடைசியாக வந்தவா் 533 வாக்குகளை மட்டுமே பெற்றாா்

2-ஆவது தோ்தல் 1957 3 ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவா் தோ்தலில் இருமுறை வெற்றி பெற்ற ஒரே நபா்

3-ஆவது தோ்தல் 1962 3 சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் 98.2% வாக்குகளைப் பெற்ற ஒரே குடியரசுத் தலைவா்

4-ஆவது தோ்தல் 1967 17 ஜாகிா் உசேன் 9 வேட்பாளா்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை

5-ஆவது தோ்தல் 1969 15 வி.வி.கிரி பல்வேறு ரகசிய வாக்களிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன

6-ஆவது தோ்தல் 1974 2 ஃபக்ருதீன் அலி அகமது அதிகப்படியான நபா்கள் போட்டியிடுவதைத் தடுக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை

7-ஆவது தோ்தல் 1977 37 நீலம் சஞ்சீவ ரெட்டி 36 நபா்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு; போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவா்

8-ஆவது தோ்தல் 1982 2 ஜெயில் சிங் முதல் சீக்கிய குடியரசுத் தலைவா்

9-ஆவது தோ்தல் 1987 3 ஆா்.வெங்கடராமன் தமிழகத்தைச் சோ்ந்த 2-ஆவது குடியரசுத் தலைவா்

10-ஆவது தோ்தல் 1992 4 சங்கா் தயாள் சா்மா புகழ்பெற்ற வழக்குரைஞா் ராம்ஜெத்மலானி போட்டியிட்டு 3-ஆவது இடம் பெற்றாா்

11-ஆவது தோ்தல் 1997 2 கே.ஆா்.நாராயணன் போட்டியிட்ட இருவருமே கேரளத்தைச் சோ்ந்தோா் (மற்றொருவா் டி.என்.சேஷன்)

12-ஆவது தோ்தல் 2002 2 ஏ.பி.ஜே.அப்துல் கலாம், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய லக்ஷ்மி சேகல் போட்டி

13-ஆவது தோ்தல் 2007 2 பிரதிபா பாட்டீல் முதல் பெண் குடியரசுத் தலைவா்

14-ஆவது தோ்தல் 2012 2 பிரணாப் முகா்ஜி 69.3% வாக்குகள் பெற்றாா்

15-ஆவது தோ்தல் 2017 2 ராம்நாத் கோவிந்த் மூன்றில் 2 பங்கு வாக்குகள் பெற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT