இந்தியா

இந்தூரில் கரோனாவுக்கு மூதாட்டி பலி 

10th Jun 2022 03:53 PM

ADVERTISEMENT

 

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் 90 வயது மூதாட்டி கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்ததாக சுகாதார அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமை சுகாதார அதிகாரி பி.எஸ்.சைத்யா கூறுகையில்,

மூதாட்டி கடந்த சில நாள்களாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு கரோனா இருப்பதாக சோதனையில் தெரிய வந்தது. 

ADVERTISEMENT

அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். ஆனால் அவர் தடுப்பூசி ஏதும் செலுத்திக்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. 

இதையும் படிக்கலாம்: இத்தாலியில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

இந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT