இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: புதிதாக 7,584 பேருக்கு தொற்று

10th Jun 2022 09:46 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,584 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு மேலும் 24 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்று ஒரு நாள் தொற்று பாதிப்பு 7,240 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,584 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,32,05,106 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 36,267 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது.

ADVERTISEMENT

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 24 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.  இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,715 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1,21 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இன்று 3,791போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,44,092 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.71 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 15,31,510 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 1,94.76,42,992 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | தொழில் நோ்த்தியை மேம்படுத்தவும்: பொதுத் துறை நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT