இந்தியா

மாநிலங்களவைத் தேர்தல்: ராஜஸ்தானில் 3 இடங்களை வென்றது காங்கிரஸ்

10th Jun 2022 09:28 PM

ADVERTISEMENT


ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 3 பேரும் வெற்றி பெற்றுள்ளதாக அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் அனைத்து 200 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனர். அவையில் காங்கிரஸுக்கு 108 எம்எல்ஏ-க்கள், பாஜகவுக்கு 71, சுயேச்சைகள் 13, ராஷ்ட்ரீய லோகந்திரிக் கட்சிக்கு 2 மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாரதிய பழங்குடியின கட்சிக்குத் தலா இரண்டு எம்எல்ஏ-க்கள் உள்ளனர். 

இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரண்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுவிட்டதாக அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்கபா.ஜ.க. வேட்பாளர் யார்? தமிழிசையா? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

ADVERTISEMENT

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அசோக் கெலாட் பதிவிட்டுள்ளதாவது:

"ராஜஸ்தானில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களவை இடங்களை வென்றிருப்பது ஜனநாயகத்தின் வெற்றி. புதிதாகத் தேர்வாகியுள்ள மூன்று எம்.பி.க்கள் பிரமோத் திவாரி, முகுல் வாஸ்னிக் மற்றும் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்."

பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கன்ஷியாம் திவாரி 4-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "என்னை வேட்பாளராக்கியதற்கு மாநில மற்றும் மத்திய தலைமைக்கு நன்றியுடன் இருப்பேன். நான் 43 வாக்குகளைப் பெற்றுள்ளேன்" என்றார்.

மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன் இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன.

Tags : Ashok Gehlot
ADVERTISEMENT
ADVERTISEMENT