இந்தியா

எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு: ராகுல்காந்தி எச்சரிக்கை

10th Jun 2022 10:57 AM

ADVERTISEMENT

இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் நடவடிக்கைக்கான அடிதளத்தை உருவாக்கும் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியிருந்தார்.

இதையடுத்து கிழக்கு லடாக் எல்லையை ஒட்டிய பகுதிகளிலும், வடக்கு எல்லையில் இந்தியாவின் கிழக்கு ராணுவ தலைமையகம் வரையிலான எல்லைப் பகுதியிலும் படைகளின் எண்ணிக்கையை சீனா கணிசமாக அதிகரித்திருக்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கை கவலையளிக்கக் கூடிய விஷயம்தான்.

எல்லையில் நிலைமையை தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சீனா படைகளை அதிகரித்திருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்தியாவும் படைகளின் எண்ணிக்கையையும் பிற பாதுகாப்பு கட்டமைப்புகளையும் அதிகரித்திருக்கிறது. எனவே, எந்தவித அச்சுறுத்தல்களையும் எதிா்கொள்ள இந்தியா தயாா் நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

அதே நேரம், எல்லையில் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது தொடா்பான இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் அளவிலான
அடுத்த கட்ட பேச்சுவாா்த்தை விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் நடவடிக்கைக்கான அடிதளத்தை உருவாக்கும் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்க பதிவில், இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும் என்றும், சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பதை மறுப்பதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது மத்திய அரசு என்று ராகுல் கூறியுள்ளார் .

லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியதை மேற்கோள்காட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க |இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: புதிதாக 7,584 பேருக்கு தொற்று

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT