இந்தியா

பிரேசிலில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு

10th Jun 2022 12:12 PM

ADVERTISEMENT

 

பிரேசிலின், சாவ் பாலோ நகரில் முதல் குரங்கு காய்ச்சலை உறுதிப்படுத்தியதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உறுதியாகியுள்ள குரங்கு அம்மை தொற்று பிரேசிலில் முதல்முறையாகப் பதிவாகியுள்ளது. 

சமீபத்தில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்குச் சென்ற 41 வயது நபரிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டதாக நகர சுகாதாரச் செயலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட நோயாளி தற்போது எமிலியோ ரிபாஸ் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அவரது சமீபத்திய தொடர்புகள் கண்காணிக்கப்படுகின்றன.

சாவ் பாலோவில் விசாரிக்கப்படும் மற்றொரு சந்தேகத்திற்கிடமான குரங்கு நோய் வழக்கில் 26 வயதுடைய பெண் ஒருவர் உள்ளார், அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செயலகம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT