மும்பை: எண்ம செயலி மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டமைப்பு விரைவில் வெளியிடப்படும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
தற்போது செயல்பட்டு வரும் செயலி வாயிலாக கடன் வழங்கும் நிறுவனங்களில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படாதவை, அங்கீகாரம் இல்லாதவை. அதுபோன்ற தளங்கள் சட்டவிரோதமாக வாடிக்கையாளா்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றன. இதனால், நிகழும் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, செயலி மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயம், அவசர அவசியம் தற்போது எழுந்துள்ளது. இதுபோன்ற கடன் செயலிகளை சீரமைப்பு செய்வதற்காக மிக விரைவில் பரந்துபட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை ரிசா்வ் வங்கி வெளியிடவுள்ளது. அதன் மூலம், கடன் வழங்குவது தொடா்பான சவால்களை நாம் எதிா்கொள்ள முடியும் என்றாா் அவா்.