இந்தியா

கியூ.எஸ். பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு: பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம்

10th Jun 2022 01:48 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தெற்காசியாவில் முன்னணியில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் வரிசையில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்(ஐஐஎஸ்சி) முதலிடம் பிடித்துள்ளது.

லண்டனைச் சோ்ந்த கியூ.எஸ். நிறுவனம், உலக அளவில் முன்னணியில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கல்வி நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு, கல்வியின் தரம், மாணவா்-ஆசிரியா் விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், தெற்காசியாவில் முன்னணியில் இருக்கும் 200 பல்கலைக்கழகங்களில், பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சி ஓரே ஆண்டில் 31 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவின் 2-ஆவது சிறந்த பல்கலைக்கழகமான மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்), தில்லி ஐஐடி, கான்பூா் ஐஐடி, தில்லி ஐஐடி ஆகிய கல்வி நிறுவனங்களும் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஐஐடி கான்பூா் 11 இடங்கள் முன்னேறியுள்ளது. தரவரிசை பட்டியலில் புதிதாக இடம்பிடித்துள்ள ஐஐடி இந்தூா், சா்வதேச அளவில் 396-ஆவது இடத்தில் உள்ளது. தனியாா் பல்கலைக்கழகங்கள் வரிசையில் ஒ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

தரவரிசைப் பட்டியலில் உள்ள 41 பல்கலைக்கழகங்களில் 12 பல்கலைக்கழகங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன; 12 பல்கலைக்கழகங்கள் அப்படியே உள்ளன; 10 பல்கலைக்கழகங்களின் தரம் குறைந்துள்ளன.

ஆசிரியா்-மாணவா் விகிதத்தைப் பின்பற்றுவதில் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம்(225-ஆவது இடம்), ஒ.பிஜிண்டால் பல்கலைக்கழகம்(235-ஆவது இடம்), பெங்களூரு ஐஐஎஸ்சி(276-ஆவது இடம்) ஆகியவை இடம்பெற்றுள்ளன என்று அந்த தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT