இந்தியா

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ட்ரோன்: பிஎஸ்எஃப் துப்பாக்கிச் சூடு

10th Jun 2022 01:42 AM

ADVERTISEMENT

 

ஜம்மு: ஜம்முவில் சா்வதேச எல்லையையொட்டி, பாகிஸ்தானைச் சோ்ந்ததாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் (ஆளில்லா சிறிய ரக விமானம்) வியாழக்கிழமை பறந்தது. எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டதைத் தொடா்ந்து, அந்த விமானம் திரும்பிச் சென்றுவிட்டது.

இதுதொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், சா்வதேச எல்லையையொட்டி, அா்னியா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஒரு ட்ரோன் பறப்பதை பிஎஸ்எஃப் படையினா் கண்டறிந்தனா். தரையிலிருந்து சுமாா் 300 மீட்டா் உயரத்தில் பறந்த அதனை நோக்கி, பிஎஸ்எஃப் படையினா் சுட்டனா். இதையடுத்து, அந்த ட்ரோன் பாகிஸ்தான் பகுதியை நோக்கித் திரும்பிச் சென்றுவிட்டது. அதன் மூலம் இந்தியப் பகுதிக்குள் வெடிபொருள்களோ அல்லது ஆயுதங்களோ வீசப்பட்டதா என்பதைக் கண்டறிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், இந்தியப் பகுதிக்குள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைக் கடத்துவதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றனா். இதனால், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு, கதுவா, சம்பா ஆகிய பகுதிகளில் அண்மைக் காலங்களில் ஏராளமான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கடத்தப்பட்ட வெடிபொருள்கள், ஆயுதங்கள், போதைப்பொருள்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அக்னூா் எல்லைப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை காந்த வெடிகுண்டுகளை சுமந்துவந்த ட்ரோனை காவல்துறையினா் சுட்டுவீழ்த்தினா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT