இந்தியா

ஜூலை 18-ல் குடியரசுத் தலைவர் தேர்தல்

9th Jun 2022 03:23 PM

ADVERTISEMENT


புது தில்லி: வரும் ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று புது தில்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

புது தில்லியின் விஞ்யான் பவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியிருப்பதாவது,

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, அதற்கு முன்பே, தேர்தலை நடத்தி புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 15 விஷயங்கள்

புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார். மாநிலங்களவை தலைமைச் செயலாளர் பிரமோத் சந்திரமோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு10,86,431 ஆக உள்ளது. 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,033 எம்எல்ஏக்கள் என ஒட்டுமொத்தமாக 4,809 பேர் வாக்களிப்பார்கள்.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதியும் நடைபெறும். 

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் ஜூன் 15ஆம் தேதி ஆரம்பம். வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29ஆம் தேதி. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜூலை 2ஆம் தேதி கடைசி நாளாகும். குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம்தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்தி வரும் நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 10ஆம் தேதி நிறைவு பெற்று, புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில எம்எல்ஏக்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரை தேர்வு செய்யவிருக்கிறார்கள்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT