இந்தியா

4 மாநிலங்களை உன்னிப்பாக கவனிக்கும் மத்திய அரசு: ஏன் தெரியுமா?

9th Jun 2022 04:09 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் கரோனா அடுத்த அலை எழுமோ என்ற அச்சம் மெல்ல எழும் அளவுக்கு நாள்தோறும் கரோனா பாதிப்பு சப்தமில்லாமல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கரோனா அதிகரிக்கவில்லை என்பதும், ஒரு சில மாநிலங்களில்தான் அதிக பாதிப்பு இருக்கிறது என்பதும் புள்ளிவிவரம் சொல்லும் நல்ல செய்தி.

இதையும் படிக்க.. அதிகம்பேர் வைத்திருக்கும் பாஸ்வேர்டு: உங்களுடையதும் இருக்கிறதா பாருங்கள்?

அவ்வாறு, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், தில்லி உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்களை அனுப்பியிருக்கும் மத்திய சுகாதாரத் துறை, தற்போது அங்கு மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

ADVERTISEMENT

கரோனா பரிசோதனை அதிகரித்தல், கரோனா உறுதி செய்யப்படுபவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து தொடர் நிகழ்வுகளில் மாநில சுகாதாரத் துறைகள் கவனம் செலுத்துகிறதா என்றும் கண்காணிக்கப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT