இந்தியா

நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிக நாள்கள் வாழ்கிறார்களாம்

8th Jun 2022 04:04 PM

ADVERTISEMENT


பாட்னா: பிகார் மாநிலத்தில், ஆண்களை விடவும், பெண்கள் சராசரியாக 9 மாதங்கள் கூடுதல் ஆயுளோடு வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் உயிரிழக்கும் ஆண் மற்றும் பெண்களின் வயது விவரங்களை அலசி ஆராய்ந்ததில் இந்த தகவலை இந்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிகார் மாநிலத்தில் பிறக்கும் ஆண்களின் சராசரி ஆயுள் 68.8 வருடங்களாக இருப்பதாகவும், பெண்களின் சராசரி ஆயுள் 69.6 வருடங்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனப்படையில்தான், பிகார் மாநிலத்தில் ஆண்களை விடவும் பெண்கள் 9 மாதங்கள் கூடுதலாக ஆயுளைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இதுவே ஒட்டுமொத்த நாட்டளவில் எடுத்துக் கொண்டால், பெண்களின் சராசரி ஆயுள் 71.1 வருடங்களாகவும், ஆணின் சராசரி ஆயுள் 68.4 வருடங்களாகவும் இருப்பதாகவும், தில்லியில் ஒரு மனிதனின் சராசரி ஆயுள் 75.9 வருடங்களாக உள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT