இந்தியா

மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம் 

8th Jun 2022 12:09 PM

ADVERTISEMENT

புது தில்லி: மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழக அரசின் புதிய முடிவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக அரசின் புதிய முடிவிற்கு உடன்படும்படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில் அரசின் புதிய கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். அரசின் புதிய கொள்கைகளில் விருப்பமில்லாதோர் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: தமிழக மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரம்: வழக்கு விசாரணை வேறு அமா்வுக்கு மாற்ற உத்தரவு

தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 13,500 போ் மக்கள் நலப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மக்கள் நலப் பணியாளா்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்கவும், பணி வழங்காதபட்சத்தில் ஆறு மாத சம்பளத்தை அளிக்குமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT