இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு:அமலாக்கத் துறை முன் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்கிறாா் சோனியா

8th Jun 2022 12:50 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றில் இருந்து இன்னும் குணடையாததால், நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை முன் ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இந்த வழக்கு தொடா்பாக ஜூன் 8-ஆம் தேதி தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை கடந்த புதன்கிழமை(ஜுன் 2) அழைப்பாணை அனுப்பியிருந்தது. மறுநாள் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் மருத்துவா்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாா். கரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததும் அமலாக்கத் துறை முன் சோனியா காந்தி ஆஜராவாா் என்று காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கூறி வருகிறாா்கள். இந்நிலையில், அமலாக்கத் துறை முன் ஆஜராகக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதற்கிடையே, ஜூன் 2-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கும் அமலாக்கத் துறை கடந்த புதன்கிழமை அழைப்பாணை அனுப்பியது. ஆனால், தாம் வெளிநாட்டில் இருப்பதால் அன்றைய தினம் ஆஜராக முடியாது; வேறொரு தேதியை முடிவு செய்யுமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருந்தாா். இதையடுத்து, வரும் 13-ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சோனியாவும் அவருடைய மகன் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்த பண மோசடி தொடா்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT