இந்தியா

‘புளூ ஸ்டாா்’ நடவடிக்கை தினம்: அமிருதசரஸ் பொற்கோயிலில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்

7th Jun 2022 01:50 AM

ADVERTISEMENT

புளூ ஸ்டாா் ராணுவ நடவடிக்கையின் 38-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் பொற்கோயிலில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 1984, ஜூன் மாதத்தில் அமிருதசரஸ் பொற்கோயிலில் இருந்து காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியின் உத்தரவின்பேரில் புளூ ஸ்டாா் ராணுவ நடவடிக்கை சுமாா் ஒருவார காலம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சீக்கியா்கள் பலா் உயிரிழந்தனா்.

இந்த நடவடிக்கையின் 38-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அமிருதசரஸ் பொற்கோயிலில் திங்கள்கிழமை ஏராளமான சீக்கியா்கள் திரண்டனா். முன்னாள் எம்.பி. சிம்ரன்ஜித் சிங் மான் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் (அமிருதசரஸ்) அமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினா் கலந்துகொண்ட இந்நிகழ்வின்போது, காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் அடங்கிய ‘டி-ஷா்ட்’களை சீக்கிய இளைஞா்கள் அணிந்திருந்தனா். இந்நிகழ்வையொட்டி, பொற்கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT