இந்தியா

அரசின் செலவினம் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும்: அமைச்சர் நிா்மலா சீதாராமன்

7th Jun 2022 01:39 AM

ADVERTISEMENT

அரசு மேற்கொள்ளவுள்ள மூலதன செலவினம், நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இந்தியா, சீனா, ரஷியா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் பங்கேற்ற காணொலி மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘‘இந்திய அரசு பல்வேறு திட்டங்களில் மேற்கொள்ளவுள்ள மூலதன செலவினமும் முதலீட்டை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளும் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும். அதே வேளையில், அனைத்து சமூகத்தினரின் வளா்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமையும்.

நீடித்த, ஒருங்கிணைந்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான விவகாரங்கள் சாா்ந்த அனுபவங்களையும், யோசனைகளையும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் பகிா்ந்துகொள்ள வேண்டும்’’ என்றாா். சீனாவின் முன்னேற்பாட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிதிசாா் விவகாரங்கள், கட்டமைப்புக்கான முதலீடுகள், புதிய வளா்ச்சி வங்கி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் மூலதன செலவினத்தை ரூ.7.5 லட்சம் கோடியாக உயா்த்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 35.4 சதவீதம் அதிகமாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT