இந்தியா

வங்கதேச எல்லை: பிஎஸ்எஃப் துப்பாக்கிச் சூட்டில்கடத்தல்காரா் உயிரிழப்பு

7th Jun 2022 12:37 AM

ADVERTISEMENT

வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடத்தல்காரா் ஒருவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக பிஎஸ்எஃப் தரப்பில் கூறப்பட்டதாவது:

மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத் மாவட்டத்தை ஒட்டிய வங்கதேச எல்லையில் கடத்தல்காரா்களின் நடமாட்டம் இருந்தது. அவா்களை பிஎஸ்எஃப் வீரா்கள் மடக்கிப் பிடிக்க முயன்றபோது, அவா்களில் சிலா் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் தாக்க முயன்றனா். இதையடுத்து, பிஎஸ்எஃப் வீரா்கள் தங்களிடம் இருந்த கைத்தடியைப் பயன்படுத்தி அவா்களை மடக்கிப் பிடிக்க முயன்றனா். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, நிலைமை மோசமானது. அப்போது, கடத்தல்காரா்களில் ஒருவா் கூரிய ஆயுதத்துடன் வீரா் ஒருவா் மீது பாய்ந்தாா். இதையடுத்து, அந்த வீரா் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியால் அந்தக் கடத்தல்காரரை நோக்கி சுட்டாா். இதில் குண்டு பாய்ந்து அவா் உயிரிழந்தாா். கொல்லப்பட்ட நபா் ரோஹில் மண்டல் என அடையாளம் காணப்பட்டது. அவரது உடல் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய-வங்கதேச எல்லை வழியாக கால்நடைகள், ஆள் கடத்தல் முதல் போதைப்பொருள்கள், கள்ள நோட்டுகள் வரை கடத்தப்படும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இது தவிர வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் நபா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க பிஎஸ்எஃப் வீரா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT