இந்தியா

'நம்பவே முடியவில்லை'.. உத்தரகண்ட் விபத்தில் பலியானோரின் பரிதாபத்துக்குரிய பின்னணி

6th Jun 2022 04:13 PM

ADVERTISEMENT


பன்னா: ராஜேந்திர சிங் ராஜ்புத்.. தனது குடும்பத்தில் வருவாய் ஈட்டிவந்த ஒரே ஒரு தந்தையும் உத்தரகண்ட் பேருந்து விபத்தில் இறந்துவிட்டதையும், சார் தாம் யாத்திரை இப்படி இறுதியாத்திரையாக மாறும் என்று நினைக்கவில்லை என்றும் கூறுகிறார்.

எதிர்பாராத தந்தையின் இழப்பு, எதிர்காலம் பற்றிய அச்சம், அடுத்த என்ன நடக்கும்? எப்படி குடும்பத்தை நடத்துவது, ஈடில்லாத இழப்பை எப்படி தாங்குவது என்ற பல்வேறு உணர்ச்சிப் போராட்டங்களுக்கு இடையே கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் ராஜ்புத்.

இதையும் படிக்க.. வருங்கால கணவரைக் கைது செய்த 'பெண் சிங்கத்துக்கு' வந்த சோதனை?

இதுபோலவே, உத்தரகண்ட் பேருந்து விபத்தில் தங்களது தந்தையை இழந்த இரண்டு சிறார்களும், ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ளவும் வார்த்தைகளின்றி, கண்களும் உலர்ந்து போன நிலையில் தந்தையின் உடலுக்காக காத்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

கிராமத்தில் நடக்கும் நாடகத்தில் சிறப்பாக நடித்து மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த பங்கே பிகாரி என்ற இளைஞர் இந்த விபத்தில் பலியான செய்தி அறிந்து அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதுபோல, சகோதரரை இழந்தவர்களும், குடும்பத்தில் ஒருவரை இழந்தவர்கள் என பலதும் தங்களது குடும்பப் பின்னணியையும், குடும்பத்தில் வருவாய் ஈட்டிவந்த ஒரே நபரையும் இழந்து, எதிர்காலம் பற்றிய அச்சமூட்டும் நினைவுகளுடன் உடலுக்காக காத்திருக்கிறார்கள்.

உத்தரகண்ட் மாநிலத்தில் பக்தா்கள் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 26 போ் உயிரிழந்தனா். நான்கு பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து மாவட்ட மீட்புக் குழு அதிகாரி தேவேந்திர பட்வால் கூறியிருந்ததாவது,

மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் உத்தரகண்டில் உள்ள புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்றனா். அந்தப் பேருந்தில் ஓட்டுநா், உதவியாளா் தவிர 28 போ் பயணிகள் இருந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் ரிகாவு காத் என்ற இடத்தருகே அந்தப் பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து மாநில பேரிடா் மீட்புப் படையினா், காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினா். அருகில் உள்ள நகரங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்களும் வந்தன. காயங்களுடன் மீட்கப்பட்ட 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்தில் 26 போ் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்குத் தலா ரூ.50,000 நிவாரணத் தொகையை பிரதமா் அறிவித்தார்.

இதற்கிடையே, இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சௌஹான் கூறியிருப்பதாவது, பலியான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்களின் உடல்களை இந்திய விமானப் படை விமானம் மூலம் கொண்டு செல்ல  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அனுமதி கேட்டேன். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை விமானம் மூலம் டேஹ்ராடூனிலிருந்து உடல்கள், பிற்பகலில் மத்தியப் பிரதேசம் கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்திருந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT