இந்தியா

கரோனாவைத் தொடர்ந்து அச்சமூட்டும் புதிய நோய்: கேரளத்திடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு

6th Jun 2022 05:49 PM

ADVERTISEMENT


புது தில்லி; கேரள மாநிலத்தில் நோரோ வைரஸ் பாதித்த இரண்டு நோயாளிகள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக மாநில சுகாதார கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வயிற்றுப் பகுதியில் தாக்கி பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.

நோரோ தீநுண்மி பொதுவாக விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவுகிறது. எனவே, விலங்குகளைக் கையாள்பவா்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முதல் பாதிப்பு ஆலப்புழாவில் 2021ஆம் ஆண்டு பதிவானது. சுமார் 950 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. அதிலிருந்து சுமார் ஒன்றரை மாதம் நோரோ பாதிப்பு கண்டறியப்பட்டநிலையில், பிறகு கட்டுப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது ஜூன் மாதம் மீண்டும் நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிச் செல்லும் இரண்டு மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT