இந்தியா

'சாகும் வரை சிறை': வளர்ப்புத் தந்தைக்கு நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு

6th Jun 2022 12:04 PM

ADVERTISEMENT

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் அமர்வு நீதிமன்றம், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்புத் தந்தைக்கு நான்கு ஆயுள் தண்டனை விதித்து, சாகும் வரை சிறையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 40 வயது வளர்ப்புத் தந்தைக்கு, அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட நான்கு சட்டப்பிரிவுகளிலும் நான்கு ஆயுள் தண்டனை விதித்தும், அவர் சாகும் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க.. வருங்கால கணவரைக் கைது செய்த 'பெண் சிங்கத்துக்கு' வந்த சோதனை?

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 15 வயது சிறுமி, கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான் அவர் கருவுற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு காவல்நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயாரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது வளர்ப்புத் தந்தை கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டு, டிஎன்ஏ பரிசோதனை மூலம், வளர்ப்புத் தந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT