இந்தியா

உத்தரகண்ட் பேருந்து விபத்து நடந்தது எப்படி? முதல்வர் விளக்கம்

6th Jun 2022 11:24 AM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 26 பேர் பலியான சம்பவம் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் உத்தரகண்டில் உள்ள புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்றனா். அந்தப் பேருந்தில் ஓட்டுநா், உதவியாளா் தவிர 28 போ் பயணிகள் இருந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் ரிகாவு காத் என்ற இடத்தருகே அந்தப் பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படிக்க | உத்தரகண்ட் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

ADVERTISEMENT

இதையடுத்து மாநில பேரிடா் மீட்புப் படையினா், காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினா். இதில், சம்பவ இடத்திலேயே 25 பேர் பலியாகினர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனிக்காமல் ஒருவர் பலியானார்.

இந்த விபத்து குறித்து முதல்வர் புஷ்கர் தாமி தெரிவித்ததாவது:

பேருந்தின் ஓட்டுநர் கூறுகையில், ஸ்டீயரிங் வேலை செய்யாததால், இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும், மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT