இந்தியா

அமர்நாத் பக்தர்களுக்கு உதவ தேசிய நெடுஞ்சாலையில் மீட்புக் குழுக்கள் அமைப்பு

6th Jun 2022 12:35 PM

ADVERTISEMENT

 

இனி வரவிருக்கும் அமர்நாத் யாத்திரையின் போது பக்தர்களுக்கு உதவுவதற்காக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மீட்புக் குழுக்கள் நிறுத்தப்படும் என்று திங்களன்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

நெடுஞ்சாலையில், குறிப்பாக சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மீட்புக் குழுக்களை நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராம்பன் காவல் கண்காணிப்பாளர் மோஹிதா ஷர்மா தலைமையில் நடந்த பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் ராம்பன் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், 

ADVERTISEMENT

யாத்திரையின் வழித்தடங்களில் அடிப்படை முகாம்கள் அமைக்கப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்கூட்டியே செயல்படுத்தப்படும். 

இதையும் படிக்கலாம்: இனி ஐஆர்சிடிசி செயலி மூலம் இத்தனை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாமா?

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, அமர்நாத் யாத்திரை தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பாரம்பரிய 48-கி.மீ நுன்வான் மற்றும் மத்திய காஷ்மீரின் கந்தர்பாலில் 14 கி.மீ பால்டால் ஆகிய இரட்டை வழித்தடங்களில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், யாத்திரையை சுமுகமாகவும் அமைதியாகவும் நடத்துவதற்கு பயனுள்ள வழிமுறை மற்றும் திட்டமிடல் வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும்போது, ​​முக்கியமான இடங்கள் மற்றும் அடிப்படை முகாம்களில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளை ஷர்மா கேட்டுக் கொண்டார்.

ராணுவம், மத்திய ஆயுதக் காவல் படைகள், காவல்துறை மற்றும் சிவில் நிர்வாகத்தின் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் நிறுவப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT