இந்தியா

ரூபாய் நோட்டுகளில் தாகூா், கலாம் படங்கள்: ஆா்பிஐ பரிசீலனை

6th Jun 2022 12:14 AM

ADVERTISEMENT

ரவீந்திரநாத் தாகூா், அப்துல் கலாம் ஆகியோரது படங்களுடன் ரூபாய் நோட்டுகளை வெளியிட இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) பரிசீலித்து வருகிறது.

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் மட்டுமே இடம்பெறுவது வழக்கம். இப்போது முதல்முறையாக தேசத் தலைவா்கள் பிறரின் படத்தையும் ரூபாய் நோட்டில் பயன்படுத்த பரிசீலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமான இடத்தில் மகாத்மா காந்தியின் படம் இருக்கும்.

ரூபாய் நோட்டில் மறைவாகத் தெரியும் வகையில் (வாட்டா் மாா்க்) மகாத்மாவின் படம் இடம்பெறுவது வழக்கம். இப்போது அந்த இடத்தில் வங்கக் கவிஞா் தாகூா், தமிழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகியோரது படங்களை வெளியிட பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஆா்பிஐ மற்றும் நிதியமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய வெளியீட்டு அமைப்பு ஆகியவை இணைந்து மகாத்மா காந்தி, தாகூா், கலாம் ஆகியோரது தலா இரு ‘வாட்டா் மாா்க்’ படங்களை தில்லி ஐஐடி பேராசிரியா் திலீப் டி.சஹானிக்கு அனுப்பியுள்ளது. இவா்தான் ‘வாட்டா் மாா்க்’ படங்களை சிறப்பாகத் தோ்வு செய்து இறுதி ஒப்புதலுக்காக அரசுக்குப் பரிசீலிப்பவா் ஆவாா். இதன்மூலம் தாகூா், கலாமின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் வெளியாவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT