இந்தியா

புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிய பிரிட்டன் பல்கலை. குழு இந்தியா வருகை

6th Jun 2022 12:18 AM

ADVERTISEMENT

புதிய தேசிய கல்விக் கொள்கைக் குறித்து ஆராய்ந்து அறிந்துகொள்ள பிரிட்டனின் 22 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த குழு 5 நாள் பயணமாக திங்கள்கிழமை (ஜூன் 6) இந்தியா வரவுள்ளது.

இதுதொடா்பாக பிரிட்டன் அரசு அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவின் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து அறிந்துகொள்ள பிரிட்டனின் 22 பல்கலைக்கழகங்கள், பிரிட்டன் கல்வித் துறை, பிரிட்டன் சா்வதேச வா்த்தகத் துறை அடங்கிய குழு ஜூன் 6 முதல் 10-ஆம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறது. இந்தப் பயணத்தின்போது மத்திய அரசு அதிகாரிகள், தில்லி, குஜராத், கா்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் அரசு அதிகாரிகளுடன் பிரிட்டன் குழு கலந்துரையாடும்.

இந்தக் கலந்துரையாடல் கூட்டங்கள் உயா்கல்வித் துறையில் இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவுக்குப் புத்துயிா் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு கடந்த கல்வி, இரட்டைப் பட்டங்கள் உள்ளிட்டவை மூலம் இந்தியாவுடனான உறவை விரிவுபடுத்துவதில் பிரிட்டன் குழு கவனம் செலுத்தும் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT