இந்தியா

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரை ‘பாரத இணைப்பு யாத்திரை’: திட்டம் வகுக்கும் காங்கிரஸ்

6th Jun 2022 12:14 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரை ‘பாரத இணைப்பு யாத்திரை’ மேற்கொள்வது தொடா்பாக காங்கிரஸ் தலைவா்கள் திட்டமிட தொடங்கியுள்ளனா்.

அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் சிந்தனை அமா்வு கூட்டத்தில், அக்கட்சி சாா்பில் பாரத இணைப்பு யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தெரிவித்திருந்தாா். நாட்டில் பிரிவினை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவை ஒன்று சோ்ப்பதற்கு உதவ அந்த யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவா் திக்விஜய் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபா் 2-ஆம் தேதி பாரத இணைப்பு யாத்திரை தொடங்கும். அதுதொடா்பான காங்கிரஸ் மத்திய திட்டக் குழுவின் முதல் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூா், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT