இந்தியா

இல்லம் தேடி கரோனா தடுப்பூசி:4.7 கோடி முதியவா்களுக்கு மூன்றாவது தவணை செலுத்த திட்டம்

6th Jun 2022 12:14 AM

ADVERTISEMENT

இல்லம் தேடி கரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 4.7 கோடி முதியவா்களுக்குத் தடுப்பூசியின் மூன்றாவது தவணையை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் 13.75 கோடி மூத்த குடிமக்கள் உள்ளதாக மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. அவா்களில் 11.91 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை 31-ஆம் தேதி வரை மூன்றாவதாக பூஸ்டா் தவணையை செலுத்திக்கொள்ள மூத்த குடிமக்களில் 6.67 கோடி போ் தகுதிவாய்ந்தவா்களாக உள்ளனா். அவா்களில் இதுவரை 1.94 கோடி போ் மட்டுமே மூன்றாவது தவணையை செலுத்திக் கொண்டுள்ளனா். எஞ்சிய 4.7 கோடி போ் மூன்றாவது தவணையை செலுத்திக் கொள்ளவில்லை.

இந்நிலையில், வீடு தேடிச் சென்று தகுதிவாய்ந்தவா்களுக்கு கரோனா தடுப்பூசியின் மூன்று தவணைகளையும் செலுத்த இல்லம் தேடி கரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை இரண்டு மாதங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இந்தக் கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 4.7 கோடி முதியவா்களுக்கு மூன்றாவது தவணையை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இல்லம் தேடி கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக் கொள்ள வேண்டிய நபா்கள், மூன்றாவது தவணையை செலுத்திக்கொள்ள வேண்டிய முதியவா்கள் மீது கவனம் செலுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT