இந்தியா

சாம்ராட் பிருத்விராஜ் படத்திற்கு வரிவிலக்கு அறிவித்த யோகி

2nd Jun 2022 03:00 PM

ADVERTISEMENT

 

நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள சாம்ராட் பிருத்விராஜ் படத்திற்கு வரி விலக்கு அளிப்பதாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது. 

லக்னௌவில் வியாழன் அன்று படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் இதை அறிவித்தார். 

படத்தைப் பாராட்டியதோடு, பார்க்கத் தகுந்த படம் என்றும் அவர் கூறினார். நமது வரலாற்றைக் கூறும் மிக நல்ல குடும்பப் படம், மக்கள் அனைவரும் தனது குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்றார். 

ADVERTISEMENT

திரையிடலில் மனுஷி சில்லருடன் கலந்துகொண்ட அக்ஷய் குமாருக்கு ஓ.டி.ஓ.பி தயாரிப்புகளையும் முதல்வர் பரிசாக வழங்கினார். 

சாம்ராட் பிருத்விராஜ் படம் (ஜூன் 3)வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT