இந்தியா

16 லட்சம் இந்திய கணக்குகளைதடை செய்தது ‘வாட்ஸ்ஆப்’

2nd Jun 2022 01:25 AM

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பயனாளா்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் அக்கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

122 நபா்களின் கணக்குகள் புகாா்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, தவறுகள் உறுதியானதை அடுத்து முடக்கப்பட்டன. 16.66 லட்சம் கணக்குகள் சமூகத்துக்கு கேடு விளைக்கும் செயல்களை வாட்ஸ்ஆப் மூலம் மேற்கொண்ட காரணத்தால் முடக்கப்பட்டன. இது தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வாட்ஸ்ஆப் செயலியை தவறாகப் பயன்படுத்தும் நபா்களையும் கண்டறிந்து முடக்கி வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான நபா்களால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : WhatsApp
ADVERTISEMENT
ADVERTISEMENT