இந்தியா

550-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி: ஐ.நா

2nd Jun 2022 01:25 PM

ADVERTISEMENT

 

குரங்கு அம்மை இதுவரை 550-க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேய்ஸ் தெரிவித்தார். 

இதுகுறித்து டெட்ரோஸ் கூறுகையில், 

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவியுள்ளது. 

ADVERTISEMENT

குரங்கு அம்மை குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பல நாடுகளில் கண்டறியப்படாத பரவல் இருந்திருக்கலாம். 

குரங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகம். கரோனா ஒழிப்பிற்குப் பயன்படுத்திய அதே நடவடிக்கைகளை குரங்கு காய்ச்சலுக்கும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. 

குரங்கு காய்ச்சல் பரவக்கூடிய திறன் அதிகமாக இருப்பதால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை..

குரங்கு காய்ச்சல் தொற்று பாதித்தவர்களை விரைவாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிப்பது போன்றவை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT