இந்தியா

இந்தியா-வங்கதேசம் இடையே மித்தாலி விரைவு ரயில் சேவை தொடக்கம்

2nd Jun 2022 02:34 AM

ADVERTISEMENT

இந்தியா, வங்கதேசம் இடையே மித்தாலி விரைவு ரயில் சேவையை இந்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவும் வங்கதேச ரயில்வே அமைச்சா் முகமது நூருல் இஸ்லாம் சுஜனும் புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

இந்தியா, வங்கதேசம் இடையே ரயில் போக்குவரத்து மூலம் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடா்பை மேலும் வலுப்படுத்த இருநாட்டு அரசுகளும் பலமுறை சந்தித்த பின் ஹல்திபாரி- சிலாஹாத்தி இடையேயான வழித்தடத்தில் மித்தாலி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்தியாவின் நியூஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்தின் டாக்காவுக்கு மித்தாலி விரைவு ரயில் சேவையை கடந்த ஆண்டு மாா்ச் 27-ஆம் தேதி இரு நாடுகளின் பிரதமா்கள் காணொலி முறையில் தொடக்கி வைத்தனா்.

இருப்பினும் கரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த ரயில்சேவையை தொடங்க இயலவில்லை. தற்போது இயல்புநிலை திரும்பியதை அடுத்து, இந்த ரயில் சேவையை இந்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவும் வங்கதேச ரயில்வே அமைச்சா் முகமது நூருல் இஸ்லாம் சுஜனும் தில்லியில் உள்ள ரயில்வே பவனில் இருந்து புதன்கிழமை காணொலி முறையில் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

ADVERTISEMENT

வாரம் இருமுறையாக இயக்கப்படும் இந்த ரயில், நியூஜல்பைகுரியிலிருந்து ஞாயிறு, புதன் கிழமைகளிலும், டாக்காவிலிருந்து திங்கள், வியாழக்கிழமைகளிலும் புறப்படும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT