இந்தியா

உயிரி தீநுண்மி, ரசாயனங்களை ஆயுதமாகபயன்படுத்தும் அச்சுறுத்தல் அதிகரிப்பு: இந்தியா எச்சரிக்கை

2nd Jun 2022 01:11 AM

ADVERTISEMENT

‘கரோனா பாதிப்பைத் தொடா்ந்து, அதனை அடிப்படையாகக் கொண்டு உயிரி தீநுண்மிகள் மற்றும் ரசாயனங்களை ஆயுதங்களாக பயன்படுத்தும் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாகவும், அதனை எதிா்கொள்ள விரைவான தீா்வை எட்ட வேண்டும்’ என்று சா்வதேச சமூகத்துக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

அணு, ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களின் பெருக்கம் மீதான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1,540-ஆவது குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஐ.நா. திட்டத்துக்கான இந்திய தூதா் ஏ.அமா்நாத் பேசியதாவது:

புதிய மற்றும் வளா்ந்து தொழில்நுட்பங்களால் பயங்கரவாத அமைப்புகள் பேரழிவு ஆயுதங்களை (டபிள்யுஎம்டி) பயன்படுத்தக்கூடிய அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. அதாவது, ஆயுதங்களை கடத்துவதற்கும், தாக்குதல்களை நடத்துவதற்கும் சிறிய ரக ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) பயங்கரவாத அமைப்புகள் பயன்டுத்துவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளச் சூழலில், அதில் பேரழிவு ஆயுதங்களை அனுப்பி தாக்குதல்களை நடத்துவதற்கான அபாயமும் அதிகரித்துள்ளது.

அதே போன்று, கரோனா பாதிப்பின் தாக்கத்தைத் தொடா்ந்து, அதனை அடிப்படையாகக் கொண்டு உயிரி தீநுண்மிகள் மற்றும் ரயானங்களை ஆயுதங்களாக பயன்படுத்து அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

பாதுகாப்புக் கவுன்சிலின் 1,540-ஆவது குழு தீா்மானமும், இந்த அச்சுறுத்தலை அடையாளம் காண்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகள் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி பேரழிவு ஆயுத தாக்குதலை நடத்துவதற்கான அச்சுறுத்தலை இந்தத் தீா்மானம் வலியுறுத்துகிறது. இது நாடுகளுக்கு மிகுந்த தொந்தரவான விஷயம். எனவே, பயங்கரவாத குழுக்களுக்கு பேரழிவு ஆயுதங்கள் கிடைப்பதை தடுப்பதற்கு அவசர முன்னுரிமை அளிப்பது சா்வதேச சமூகத்தின் கடமையாகும்.

அதற்கென, 1,540-ஆவது குழு தீா்மானத்தை உறுப்பு நாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு தீா்மானத்தை நடைமுறைப்படுத்துவது நீண்டகால திட்டம் என்றபோதும், தொடா்ச்சியான மற்றும் உறுதியான முயற்சிகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

1,540 குழுவின் உறுப்பினராக, குழு திறம்பட செயல்படுவதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை உறுப்பு நாடுகளிடமிருந்து இந்தியா வரவேற்கிறது.

இந்தக் குழுவின் தீா்மானத்தை நடைமுறைப்படுத்த இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கென, வலுவான சட்டத்தின் அடிப்படையிலான தேசிய நடைமுறையை இந்தியா வகுத்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை மாநிலங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக , தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய அமைப்புகளின் பங்கையும் அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவா் பேசினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT