இந்தியா

ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.41 லட்சம் கோடியாக சரிவு

2nd Jun 2022 02:38 AM

ADVERTISEMENT

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நடப்பாண்டு மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடியாக சரிவைச் சந்தித்துள்ளது. முந்தைய ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை படைத்த நிலையில், இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி), கடந்த மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.97,821 கோடியுடன் ஒப்பிடுகையில் 44 சதவீதம் அதிகமாகும்.

இருப்பினும், முந்தைய ஏப்ரலில் சாதனை அளவாக ரூ.1.68 லட்சம் கோடியும், மாா்ச் மாதத்தில் ரூ.1.42 லட்சம் கோடியும் ஜிஎஸ்டி வசூலான நிலையில், மே மாதத்தில் அதன் அளவு குறைந்துள்ளது.

ADVERTISEMENT

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் முறையே ரூ.1.33 லட்சம் கோடி மற்றும் ரூ.1,40,986 கோடியாக காணப்பட்டது.

நடப்பாண்டு மே மாதத்தில் வசூலான ரூ.1,40,885 ஜிஎஸ்டியில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,036 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.73,345 கோடியும், செஸ் ரூ.10,502 கோடியும் வசூலாகியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : GST
ADVERTISEMENT
ADVERTISEMENT