இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் அசாதாரண சூழல்: அமித் ஷா தலைமையில் நாளைஉயா்நிலை ஆய்வுக் கூட்டம்

2nd Jun 2022 02:34 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பண்டிட் சமூக மக்களை பயங்கரவாதிகள் குறிவைத்து கொலை செய்து வருவதால் அங்கு ஏற்பட்டுள்ள அசாரண சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, உள்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பலா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனா்.

ஜம்மு-காஷ்மீரில் சமீப நாள்களில் பண்டிட் சமூகத்தினா், அரசு ஊழியா்கள், வெளிமாநிலத் தொழிலாளா்கள் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் குறிவைத்து கொலை செய்வது அதிகரித்து வருகிறது. அங்குள்ள குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியையை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக பண்டிட் சமூகத்தினா் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனா். ஏற்கெனவே, பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள காஷ்மீரில், இப்போது போராட்டமும் ஏற்பட்டுள்ளது பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இதற்கு நடுவே, அமா்நாத் புனித யாத்திரையும் இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இது தொடா்பாகவும் அமித் ஷா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீா் தொடா்பாக கடந்த 15 நாள்களில் இரண்டாவது முறையாக நடைபெறும் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT