இந்தியா

அச்சுறுத்தும் கரோனா: ஒரே நாளில் புதிதாக 3,712 பேருக்கு தொற்று; 5 பேர் பலி

2nd Jun 2022 09:43 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,712 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,712 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,31,47,530 ஆக உள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 19,509 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.05 சதவிகிதமாக உள்ளது.

ADVERTISEMENT

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 5 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.  இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,641 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1,22 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இன்று 2,584 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,20,394 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம்98.74 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 12,44,298 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 1,93.70,51,104 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இதையும் படிக்க | நர்சிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... எங்கே? எப்போது? எப்படி?

ADVERTISEMENT
ADVERTISEMENT