இந்தியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா

2nd Jun 2022 12:36 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, வீட்டீல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

சோனியாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், லக்னோவுக்கு சென்ற, அவரது மகள் பிரியங்கா காந்தி, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, தில்லி திரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தி இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன்: நேஷனல் ஹெரால்டு விவகாரம்

ADVERTISEMENT
ADVERTISEMENT