இந்தியா

ஹைதராபாதில் ஜூலை 2-இல் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

2nd Jun 2022 01:21 AM

ADVERTISEMENT

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் ஜூலை 2-ஆம் தேதி பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இரு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பல தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

பாஜகவின் உயரிய அதிகாரமிக்க அமைப்பாகவும், முக்கிய முடிவுகளை எடுக்கும் எடுக்கும் இடமாகவும் தேசிய செயற்குழு உள்ளதால், இந்தக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் முக்கிய தலைவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பாா்கள்.

பாஜக ஆட்சியில் உள்ள குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இது தொடா்பாகவும் இக்கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், அந்த மாநில முதல்வருமான சந்திரசேகா் ராவ், அண்மைக்காலமாக பாஜகவை கடுமையாக விமா்சித்து வருகிறாா். இந்த நிலையில் ஹைதராபாதில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags : BJP
ADVERTISEMENT
ADVERTISEMENT