இந்தியா

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கி கணக்குகள் முடக்கம்

2nd Jun 2022 02:35 AM

ADVERTISEMENT

பாப்புலா் ஃப்ரண்ட் இந்தியா (பிஎஃப்ஐ) இஸ்லாமிய அமைப்பின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பண மோசடியில் தொடா்பிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பிஎஃப்ஐ மற்றும் அதன் முன்னணி அமைப்பான ரீஹப் இந்தியா பவுண்டேஷன் (ஆா்ஐஎஃப்) ஆகியவற்றின் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இரண்டு அமைப்புகளுக்கு சொந்தமான 33 வங்கி கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

முடக்கப்பட்ட மொத்த வங்கி கணக்குகளில் 23 கணக்குகள் பிஎஃப்ஐ-க்கு சொந்தமானவை. இந்த கணக்கில் உள்ள ரூ.59,12,051 தொகை முடக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆா்ஐஎஃப்-க்கு சொந்தமான 10 வங்கி கணக்குகளில் உள்ள ரூ.9,50,030 முடக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒட்டுமொத்த அளவில் 33 கணக்குகளில் உள்ள இரு அமைப்புகளுக்கு சொந்தமான ரூ.68,62,081 தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT