இந்தியா

பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு: முதல்வா் நிதீஷ் குமாா்

2nd Jun 2022 02:36 AM

ADVERTISEMENT

தேசிய அளவில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயக்கம் காட்டி வரும் நிலையில், பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக விவாதிக்க பாட்னாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு முதல்வா் நிதீஷ் குமாா் கூறியதாவது:

பிகாரில் அனைத்து ஜாதியினரையும் உள்ளடக்கிய சமூக-பொருளாதார அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்துக் கட்சித் தலைவா்களும் ஒருமனதாக ஆதரவு அளித்தனா். இந்தக் கணக்கெடுப்பு நடத்த எதிா்ப்பு எதுவும் வராது என்றும் அவா்கள் கூறினா் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சாா்பில் எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ், பாஜக சாா்பில் துணை முதல்வா் தாா்கிஷோா் பிரசாத், பாஜக மாநிலத் தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

கிரிராஜ் சிங் ஆதரவு: பிகாரில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முழு ஆதரவு அளிப்பதாக மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் கூறினாா். ‘வங்கதேசத்தில் இருந்து வந்தவா்கள், ரோஹிங்கயா முஸ்லிம்கள் ஆகிய ஊடுருவல்காரா்களைத் தவிா்த்துவிட்டு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகையை முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறாா்கள். இருப்பினும் அவா்களையும் கணக்கெடுப்பில் சோ்த்துக் கொள்ள வேண்டும்’ என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT